மணிமுத்தாறு அருவியில் குளிக்க தடை
நெல்லை,நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள மணிமுத்தாறு அருவி மிகவும் பிரசித்தி பெற்றதாகும். ஆண்டு முழுவதும் தண்ணீர் விழும் இந்த அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்வது வழக்கம்.இந்த நிலையில் புலிகள் காப்பக துணை இயக்குனர் இளையராஜா உத்தரவின்பேரில், மணிமுத்தாறு அருவிக்கரையில் பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் கழிப்பிடங்கள் ஆகியவற்றில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே மணிமுத்தாறு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு இன்று (வியாழக்கிழமை) தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவர் என்று வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.