'தமிழக இளைஞர்கள் கம்யூனிச கொள்கைகளை படிக்க வேண்டும்' - இயக்குனர் மோகன் ஜி
சென்னை,தமிழக இளைஞர்கள் கம்யூனிசம் நோக்கி செல்வதில்லை என இயக்குனர் மோகன் ஜி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது;-"தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இளைஞர்கள் கம்யூனிசம் நோக்கி செல்வதில்லை. கம்யூனிச கொள்கையை தமிழக இளைஞர்கள் தேடிப் படிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ஜீவானந்தம் போன்ற கம்யூனிச கொள்கை கொண்ட தலைவர்கள் பற்றி இளைஞர்கள் படிக்க வேண்டும்."இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.