'கங்குவா' படத்தின் புதிய அப்டேட் வெளியிட்ட படக்குழு
சென்னை,நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தின் மேல் பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்றதால், சூர்யா - சிவா கூட்டணியில் உருவான கங்குவாவுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இப்படத்தை அக்டோபர் 10ம் தேதி வெளியிடுவதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது. அதற்காக, இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான வேட்டையன் படமும் அக்டோபர் 10ம் தேதிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது..ரஜினியின் வேட்டையன் திரைப்படமும் அதே தேதியில் வெளியாக உள்ளதால் 'கங்குவா' ரிலீஸ் தேதி தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்டது.படத்தின் புதிய ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்தது. இந்த நிலையில் கங்குவா படத்தின் புதிய அப்டேட் நாளை காலை மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. The news, the World is waiting for! Tomorrow at 11 AM #Kanguva@Suriya_offl @thedeol @directorsiva @ThisIsDSP #StudioGreen @GnanavelrajaKe pic.twitter.com/rqRIYtoCYm