திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு- சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை மறுத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்/ Animal Fat Was Used In Tirupati Laddoos Says Chandrababu Naidu YSR Congress Refutes

  மாலை மலர்
திருப்பதி லட்டில் விலங்கு கொழுப்பு சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை மறுத்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ்/ Animal Fat Was Used In Tirupati Laddoos Says Chandrababu Naidu YSR Congress Refutes

"திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரசும் வெட்கப்பட வேண்டும். திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம்" ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு விமர்சித்திருந்தார்.இந்த நிலையில் சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டை ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மறுத்துள்ளது. சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு தொடர்பாக ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான ஒய்.வி. சுப்பா ரெட்டி பதில் அளித்துள்ளார்.இது தொடர்பாக ஒய்.வி. சுப்பா ரெட்டி கூறியதாவது:-சந்திரபாபு நாயுடு திருப்பதியின் புனிதம் மற்றும் கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையை மிகவும் மோசமான வகையில் சேதப்படுத்தியுள்ளார். திருமலை பிரசாதம் தொடர்பான அவரது கருத்து மிகவும் தீங்கு விளைவிக்கக் கூடியது. எந்தவொரு நபரும் இது போன்ற வார்த்தைகளை பேசமாட்டார்கள். அல்லது குற்றச்சாட்டை உருவாக்கமாட்டார்கள்.அரசியல் ஆதாயத்திற்கு சந்திரபாபு நாயுடு எந்த அளவிற்கும் செல்வார் என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது. பக்தர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தும் வகையில், நான், எனது குடும்பத்தினருடன் திருமலை பிரசாதம் குறித்து எல்லாம் வல்ல இறைவனிடம் சத்தியம் செய்ய தயாராக உள்ளோம். சந்திரபாபு நாயுடு தனது குடும்பத்துடன் இதைச் செய்ய தயாரா?.இவ்வாறு சுப்பா ரெட்டி தெரிவித்துள்ளார்.

மூலக்கதை