ஆசிரியையை பதற வைத்த மாணவர்கள்- வீடியோ வைரல்- Maharashtra teacher rushes to resolve fight among students only to get a surprise Video
மாணவப் பருவம் இனிமையானது. மாணவ குறும்புகள் ரசிக்க வைக்கக்கூடியதாக இருக்கும். பள்ளி மாணவர்கள் சிலர் தங்கள் ஆசிரியையை கவுரவிக்க, வித்தியாசமாக இன்ப அதிர்ச்சி அளித்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி உள்ளது.மகாராஷ்டிரா மாநிலத்தில் இயங்கும் தனியார் பள்ளியில், ஆசிரியர் அறையில் இருக்கும் ஆசிரியையிடம் ஒரு மாணவர் வந்து, வகுப்பில் மாணவர்கள் சண்டையிட்டுக் கொள்வதாகவும், விரைந்து வந்து விலக்கும்படியும் கூறுகிறார். இதை உண்மையென்று நம்பிய ஆசிரியை பதறியடித்துக் கொண்டு வகுப்பறையை நோக்கி ஓடி வருவதுபோல வீடியோ தொடங்குகிறது. அவர் வகுப்பறைக்குள் நுழைந்து சண்டையிடுவதுபோல நடித்த ஒரு மாணவரை கையைப் பிடித்து இழுத்து விலக்கிவிட்டதும், திடீரென பட்டாசு வெடித்து கரவொலி எழுப்பப்படுகிறது. அவர்கள் ஆசிரியையக்கு வாழ்த்துச் சொல்லி பரிசு தருகிறார்கள். அப்போதுதான் அது சண்டையல்ல, தன்னை மகிழ்விக்க மாணவர்கள் நடத்திய நாடகம் என்பதை அறிந்த ஆசிரியை நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சுவிட்டு புன்னகை பூக்கிறார். மாணவர்கள் பரிசுப் பொருட்களை நீட்டுகிறார்கள்.மாணவர்கள் குழு இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட இதுவரை 5.4 கோடி பேர் ரசித்து உள்ளனர். பல லட்சம் பேர் 'லைக்' தெரிவித்து உள்ளனர்.