Mathura-Delhi railway route disrupted after goods train derailed near Vrindavan/உத்தர பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: ரெயில் சேவை பாதிப்பு

  மாலை மலர்
MathuraDelhi railway route disrupted after goods train derailed near Vrindavan/உத்தர பிரதேசத்தில் சரக்கு ரெயில் தடம் புரண்டு விபத்து: ரெயில் சேவை பாதிப்பு

லக்னோ:உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் உள்ள பிருந்தாவன் ரோடு என்ற இடத்தில் சரக்கு ரெயிலின் 15 பெட்டிகள் தடம் புரண்டு விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.இதையடுத்து, டெல்லி நோக்கிச் செல்லும் ரெயில் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. மேலும் அப்பகுதி வழியாக செல்லும் 15 ரெயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.தகவல் அறிந்து ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இதேபோல், நேற்று மாலை பீகாரின் நாராயண்பூரில் சரக்கு ரெயிலின் 4 பெட்டிகள் தடம்புரண்டு விபத்தில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.#WATCH | Uttar Pradesh: A goods train derailed in Mathura. Officers from the railway department along with the city police present at the spot. More details awaited. pic.twitter.com/jMuMRX3KUc

மூலக்கதை