ChandraBabu Naidu says Tirumalas laddu prasadam by using animal fat instead of ghee/திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு: ஜெகன்மீது சந்திரபாபு குற்றச்சாட்டு

  மாலை மலர்
ChandraBabu Naidu says Tirumalas laddu prasadam by using animal fat instead of ghee/திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகள் கொழுப்பு: ஜெகன்மீது சந்திரபாபு குற்றச்சாட்டு

திருப்பதி:ஆந்திர மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்துள்ளது.இந்நிலையில், ஆந்திர சட்டசபை உறுப்பினர்களுக்கான சிறப்புக் கூட்டம் மங்களகிரியில் இன்று நடந்தது. இதில் முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பங்கேற்று கடந்த 100 நாட்களில் நிறைவேற்றிய திட்டங்கள், எதிர்காலத்தில் செய்ய வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அதன்பின் அவர் பேசியதாவது:திருமலையில் உள்ள ஏழுமலையான் கோவில் மிக புனிதமானது. முந்தைய ஜெகன்மோகன் ஆட்சியில் அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில் விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக கிடைத்த தகவலைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத ஜெகன்மோகனும், ஒய்எஸ்ஆர் காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்.திருமலையின் ஒவ்வொரு அம்சமும் ஜெகன் அரசால் இழிவுப்படுத்தப்பட்டிருக்கிறது. திருப்பதி லட்டுவின் தரம் முற்றிலுமாக கேள்விக்கு உட்படுத்தப்பட்டிருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உடனடியாக சுத்தமான நெய்யை பயன்படுத்த உத்தரவிட்டோம் என தெரிவித்தார்.சந்திரபாபு நாயுடு முன்வைத்த இந்தக் குற்றச்சாட்டு பக்தர்கள் மத்தியில் கடும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை