புனித ஹஜ் பயணம் செல்ல இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- UAE Announces Registration Dates for Hajj 2025

  மாலை மலர்
புனித ஹஜ் பயணம் செல்ல இன்று முதல் விண்ணப்பிக்கலாம் UAE Announces Registration Dates for Hajj 2025

அபுதாபி:அமீரக இஸ்லாமிய விவகாரத்துறை பொது ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-உலகம் முழுவதிலும் உள்ள இஸ்லாமியர்கள் தங்களது வாழ்நாளில் ஒருமுறையாவது ஹஜ் பயணம் செல்ல விரும்புவார்கள். அமீரகத்தை சேர்ந்தவர்கள் அடுத்த ஆண்டு (2025) புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் நபர்கள் 12 வயதை அடைந்தவராகவும், கடந்த 5 ஆண்டுகளில் புனித ஹஜ் பயணத்தை மேற்கொள்ளாதவராகவும் இருக்க வேண்டும்.முதல் முறையாக ஹஜ் பயணம் செய்ய இருப்பவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள், குணப்படுத்த முடியாத நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். இதற்காக ஆணையத்தின் செயலி மற்றும் இணையத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அடுத்த ஆண்டு அமீரகத்தை சேர்ந்த 6 ஆயிரத்து 228 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் மட்டும் உலகம் முழுவதும் இருந்து சுமார் 18 லட்சம் பேர் புனித ஹஜ் பயணம் மேற்கொண்டனர்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை