சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு/ INDvsBAN chennai chepauk Test bangladesh won toss bowl first

  மாலை மலர்
சேப்பாக்கம் டெஸ்ட்: வங்கதேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு/ INDvsBAN chennai chepauk Test bangladesh won toss bowl first

இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான வங்கதேச அணி இந்தியா வந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 9.30 மணிக்கு தொடங்குகிறது.இதற்கான டாஸ் சரியாக 9 மணிக்கு சுண்டப்பட்டது. இதில் வங்கதேச அணி கேப்டன் ஷன்டோ டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.பொதுவாக இந்திய மைதானங்களில் டாஸ் வென்ற அணி பேட்டிங்கை தேர்வு செய்யும். ஆனால் சென்னையில் இன்று காலை லேசான மழை பெய்தது. மெலும், தற்போது மேகமூட்டமாக உள்ளதால், சூழ்நிலை பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால் வங்கதேச அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.நாங்களும் டாஸ் வென்றிருந்தால் பந்து வீச்சைதான் தேர்வு செய்திருப்போம் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.வங்கதேச ஆடும் லெவன் அணி:-1. ஷத்மான் இஸ்லாம், 2. ஜகிர் ஹசன், 3. நஜ்முல் ஹொசைன் ஷன்டோ (கேப்டன்), 4. மொமினுல் ஹக், 5. முஷ்பிகுர் ரஹிம், 6. ஷாஹிப் அல் ஹசன், 7. லிட்டோன் தாஸ், 8. மெஹிதி ஹசன் மிராஸ், 9. தஸ்கின் அகமது, 10. ஹசன் முகமது, 11. நஹித் ராணா.இந்தியா ஆடும் லெவன் அணி:-1. ரோகித் சர்மா, 2. ஜெய்ஸ்வால், 3. சுப்மன் கில், 4. விராட் கோலி, 5. கே.எல். ராகுல், 6. ரிஷப் பண்ட், 7. ஜடேஜா, 8. அஸ்வின், 9. பும்ரா, 10. ஆகாஷ் தீப், 11. முகமது சிராஜ்.

மூலக்கதை