Pakistan bear South Africa second match in Womens T20/பெண்கள் டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

  மாலை மலர்
Pakistan bear South Africa second match in Womens T20/பெண்கள் டி20 கிரிக்கெட்: தென் ஆப்பிரிக்காவை 13 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்

முல்தான்:தென் ஆப்பிரிக்கா பெண்கள் கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது.இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி முல்தானில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீசுவதாக அறிவித்தது.அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 181 ரன்கள் எடுத்தது. முனீபா அலி 45 ரன்னும், நிதா தார் 29 ரன்னும், சித்ரா அமீன் 28 ரன்னும் எடுத்து அவுட் ஆனார்கள். பாத்திமா சனா 37 ரன்னும், அலியா ரியாஸ் 17 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இதையடுத்து, 182 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. அந்த அணியின் சுனே லூவஸ் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தார். லாரா 36 ரன்னும், அன்னெக் போஸ் 24 ரன்னும் எடுத்தனர். சுனே லூவஸ் 53 ரன்னும், குளோ 30 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.இறுதியில், தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 168 ரன்களே எடுத்தது. இதன்மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற பாகிஸ்தான், தொடரில் 1-1 என்ற சமனிலை பெற்றது.

மூலக்கதை