Srilanka 302 for 7 wkts against Newzealand in first test/கமிந்து மெண்டிஸ் அபார சதம்: இலங்கை முதல் நாள் முடிவில் 302/7
கொழும்பு:நியூசிலாந்து அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலேவில் தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.அதன்படி, இலங்கை அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் திமுத் கருணரத்னே 2 ரன்னிலும், பதும் நிசங்கா 27 ரன்னிலும், தினேஷ் சண்டிமால் 30 ரன்னிலும், ஏஞ்சலோ மேத்யூஸ் 36 ரன்னிலும் அவுட்டாகினர்.ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கமிந்து மெண்டிஸ் பொறுப்புடன் ஆடி சதமடித்தார்.6வது விக்கெட்டுக்கு இணைந்த கமிந்து மெண்டிஸ், குசால் மெண்டிஸ் ஜோடி 103 ரன்கள் சேர்த்தது. குசால் மெண்டிஸ் அரை சதமடித்து அவுட்டானார். அவரை தொடர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கமிந்து மெண்டிஸ் 114 ரன்னில் வெளியேறினார்.இறுதியில், முதல் நாள் முடிவில் இலங்கை அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 302 ரன்கள் எடுத்துள்ளது.நியூசிலாந்து சார்பில் வில்லியம் ரூர்கே 3 விக்கெட்டும், கிளென் பிலிப்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.