பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 600 பரிசுப் பொருள்கள் ஏலம்

  தமிழ் முரசு
பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்ட 600 பரிசுப் பொருள்கள் ஏலம்

புதுடெல்லி: பிரதமர் மோடிக்கு பரிசாக அளிக்கப்படும் பொருள்கள் அவ்வப்போது மின்னணு முறையில் ஏலம் விடப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையின் ஒரு பகுதியை ராணுவ வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் நலனுக்காக வழங்கப்பட்டு வருகிறது.செவ்வாய்க்கிழமை (செப்டம்டர் 17) பிரதமர் மோடியின் 74வது பிறந்தநாளை முன்னிட்டு, ஆறாவது முறையாக ஏலம் விடும் நிகழ்வு தொடங்கியது. இந்த முறை அவருக்குப் பரிசாக கிடைத்த 600க்கும் மேற்பட்ட கலைப்பொருள்கள் ஏலம் விடப்பட்டு வருகின்றன. இந்த ஏலம் அடுத்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மின்னணு ஏலத்தில் பங்கேற்க https://pmmementos.gov.in என்ற இணையத்தளம் வழி பதிவு செய்ய வேண்டும்.

மூலக்கதை