கொள்ளையடிக்கப்பட்ட பிறகும் குடிபோதையில் மீண்டும் உறங்கச் சென்ற ஆடவர்
ஈப்போ: மலேசியாவின் பேராக் மாநிலத்தில் குடிபோதையில் இருந்த 60 வயது ஆடவர் ஒருவர் தமது காரில் உறங்கிக்கொண்டிருந்தார்.தமது காரை அவர் சாலையோரம் நிறுத்தியிருந்தார்.அப்போது இரண்டு பேர் காரின் சன்னல் கண்ணாடிகளை உடைத்தபோது அவர் விழித்துக்கொண்டார்.ஆடவரின் கைப்பேசியையும் கார் சாவிகளையும் அந்த இருவர் திருடிச் சென்றனர்.குடிபோதையில் இருந்த ஆடவர் ஒன்றும் செய்ய முடியாமல் மீண்டும் உறக்கத்தில் ஆழ்ந்தார்.இந்தத் தகவல்களை பேராக் மாநிலக் காவல்துறைத் தலைவர் அசிசி மாட் அரிஸ் தெரிவித்தார்.இக்கொள்ளைச் சம்பவம் செம்டம்பர் 16ஆம் தேதி பின்னிரவு 1 மணி அளவில் நிகழ்ந்தது.விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.சந்தேக நபர்களை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.