Government eggs sold in food shops, கள்ள சந்தையில் விற்பனையாகும் அரசு சத்துணவு முட்டை
திருச்சி:திருச்சி மாவட்டம் துறையூரில் அரசு சத்துணவு முட்டை கள்ள சந்தையில் அமோகமாக விற்பனையாகி வருகிறது.துறையூரில் உள்ள தனியார் உணவகத்தில் தமிழக அரசின் முத்திரையிட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.சத்துணவு முட்டைகள் தடையின்றி மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது.குழந்தைகளுக்கு மதிய உணவுக்காக வழங்கப்படும் முட்டை கள்ளச்சந்தையில் விற்பனையாகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.