99 வயதிலும் மணிக்கு 154 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டி மகாதீர் அசத்தல்

  தமிழ் முரசு
99 வயதிலும் மணிக்கு 154 கி.மீ. வேகத்தில் கார் ஓட்டி மகாதீர் அசத்தல்

பெட்டாலிங் ஜெயா: மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் முகம்மதுக்கு வயது என்பது ஓர் எண் மட்டுமே. அண்மையில் செப்பாங் பந்தயத் திடலில் அவர் வேகமாக கார் ஓட்டுவதைக் காட்டும் காணொளி ஒன்றில் ஃபேஸ்புக்கில் வந்தது.செப்பாங் பந்தயத் திடல் தலைவர் முகம்மது அஸ்மான் யஹ்யா ஓட்டிய Audi Q5 வகை காரின் பயணி இருக்கையில் டாக்டர் மகாதீர், 99, அமர்ந்திருப்பதைக் காணொளியின் தொடக்கப் பகுதி காண்பித்தது. காணொளியின் இறுதிக் கட்டத்தில், டாக்டர் மகாதீர் மணிக்கு 154 கி.மீ. வேகத்தில் நேராக கார் ஓட்டுவதைப் பார்க்க முடிகிறது.

மூலக்கதை