யாகி சூறாவளியால் வியட்னாமுக்கு $3.31 பி. இழப்பு: கணிப்பு

  தமிழ் முரசு
யாகி சூறாவளியால் வியட்னாமுக்கு $3.31 பி. இழப்பு: கணிப்பு

ஹனோய்: யாகி சூறாவளியால் வியட்னாமுக்கு 81.5 டிரில்லியன் டோங் (3.31 பில்லியன் வெள்ளி) மதிப்பிலான சேதம் ஏற்பட்டிருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.வியட்னாமின் வடக்குப் பகுதியை யாகி சூறாவளி பெரிய அளவில் தாக்கியது. அதனைத் தொடர்ந்து சேதத்தின் மதிப்பு, முன்னதாகக் கணிக்கப்பட்டதில் இரு மடங்காகப் பதிவாகியுள்ளதென அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தாமான ஊடகம் சனிக்கிழமையன்று (செப்டம்பர் 28) தெரிவித்தது. யாகி சூறாவளி 299 பேரைப் பலிவாங்கியது. அதில் சிக்கிய 34 பேரைக் காணவில்லை. மேலும், தொழில்துறை மையங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை பெரும் பாதிப்புக்கு உள்ளாயின. அதோடு, விவசாய நிலங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன, வீடுகள் சேதமடைந்தன, பாலம் ஒன்று சீர்குலைந்தது.“பொருளியலுக்கு ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்பின் மதிப்பு இப்போதைக்கு 81.5 டிரில்லியன் எனக் கணிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நிலச்சரிவு, திடீர் வெள்ளம் ஆகியவற்றின் காரணமாக சேதம் ஏற்பட்டது,” என்று வியட்னாம் அரசாங்கத்துக்குச் சொந்தமான வியட்னாம் செய்தி அமைப்பு (Vietnam News Agency) குறிப்பிட்டது. அந்நாட்டின் வேளாண் அமைச்சர் லெ மின் ஹோவான் இந்த விவரங்களை வெளியிட்டதாக அது தெரிவித்தது.யாகி சூறாவளியால் ஏற்பட்டுள்ள சேதத்தின் மதிப்பு 1.6 பில்லியன் வெள்ளி என்று முன்னதாக வியட்னாமின் திட்டமிடுதல் துறை அமைச்சு கணித்திருந்தது.

மூலக்கதை