நெட்டன்யாகு: உயிருக்குப் போராடும் நிலையிலும் இஸ்‌ரேல் அமைதியை நாடுகிறது

  தமிழ் முரசு
நெட்டன்யாகு: உயிருக்குப் போராடும் நிலையிலும் இஸ்‌ரேல் அமைதியை நாடுகிறது

ஜெருசலம்: இஸ்‌ரேலை அழிக்க கங்கணம் கட்டிக்கொண்டு மூர்க்கத்தனமாகத் தாக்குதல் நடத்தும் எதிரிகளுடன் போரிட்டு வருவதாகவும் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் நிலையிலும் இஸ்‌ரேல் அமைதியை நாடுகிறது என்றும் இஸ்‌ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு செப்டம்பர் 27ஆம் தேதியன்று ஐநா பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்றார் அவர்.“ஹிஸ்புல்லா அமைப்பு போரின் பாதையில் செல்கிறது. இந்த அணுகுமுறையை அது கைவிடாத வரை அந்த அமைப்பை எதிர்த்துத் தாக்குதல் நடத்துவதைத் தவிர இஸ்‌ரேலுக்கு வேறு வழி இல்லை,” என்று திரு நெட்டன்யாகு கூறினார்.இஸ்‌ரேலியர்களைப் பாதுகாக்கும் தலையாய கடமை இஸ்‌ரேலிய அரசாங்கத்துக்கும் இஸ்‌ரேலிய ராணுவத்துக்கும் இருப்பதாக அவர் தெரிவத்தார்.இஸ்‌ரேலின் நோக்கம் நிறைவேறும் வரை ஹிஸ்புல்லாவுக்கு எதிரான தாக்குதல்கள் தொடரும் என்று அவர் கூறினார்.இந்தப் போருக்கு ஈரானைப் பிரதமர் நெட்டன்யாகு குறைகூறினார்.ஈரானிய ஆதரவுடன் ஹிஸ்புல்லா செயல்பட்டு வருகிறது.பல முனைகளில் பல எதிரிகளை எதிர்த்துப் போரிட்டு வருவதாகக் குறிப்பிட்ட திரு நெட்டன்யாகு, இப்போரில் இஸ்‌ரேலின் கையோங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.“ஈரானில் இருந்தாலும் அல்லது மத்தியக் கிழக்கில் வேறு பகுதிகளில் இருந்தாலும் இஸ்‌ரேலிடமிருந்து தப்ப முடியாது. இஸ்‌ரேலிய ராணுவ வீரர்கள் பலி ஆடுகள் கிடையாது. அவர்கள் அசாத்திய துணிச்சலுடன் பதிலடி கொடுத்து வருகின்றனர்,” என்று எதிரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் திரு நெட்டன்யாகு கூறினார்.இதற்கு பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற பிரமுகர்கள் பலர் கரவொலி எழுப்பினர்.ஈரானியப் பேராளர் குழுவினர் உட்பட சிலர் வெளிநடப்பு செய்தனர்.

மூலக்கதை