செய்தியாளரைக் கைது செய்த கம்போடியா

  தமிழ் முரசு
செய்தியாளரைக் கைது செய்த கம்போடியா

நோம் பென்: விருது வென்ற செய்தியாளர் ஒருவரைக் கம்போடிய ராணுவக் காவல் பிரிவு கைது செய்துள்ளது.ஊழல், கடத்தல், இணையம் வழி மோசடிகள் போன்ற குற்றங்கள் தொடர்பாக புலன்விசாரணை செய்து அவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த செய்தியாளர் எனும் பெருமை திரு மெச் டாராவைச் சேரும்.அனைத்துலக, கம்போடிய செய்தி நிறுவனங்களுக்குப் பணியாற்றிய திரு டாரா செப்டம்பர் 30ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து தகவல் வெளியிடப்படவில்லை.“திரு டாராவை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது இருப்பிடம் தெரியாது,” என்று கம்போடிய ராணுவத்தின் செய்தித்தொடர்பாளர் பிரிகேடியர்-ஜெனரல் எங் ஹாய் தெரிவித்தார்.திரு டாரா கைது செய்யப்பட்டது குறித்து பிரபல மனித உரிமை அமைப்பான லிகாடோவும் அமெரிக்காவும் அக்கறை தெரிவித்துள்ளன.கம்போடியாவில் மோசடிக் கும்பல்கள் வசம் இருந்த மிகப் பெரிய வளாகங்களை திரு டாரா வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். மோசடிக் குற்றங்களைப் புரிய ஆள்கடத்தல் கும்பல்களால் கடத்தப்பட்ட பலர் கட்டாயப்படுத்தப்பட்டனர்.அவரது அரும்பணியை அடையாளம் கண்டு 2023ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அவருக்கு விருது வழங்கினார்.

மூலக்கதை