2024 பொதுத் தேர்தல்: வேட்புமனுவை நிறைவு செய்த கட்சிகள் - லங்காசிறி நியூஸ்
2024 பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மொத்தம் 33 சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நேற்று (08) வரை 17 அரசியல் கட்சிகளும் 16 சுயேச்சைக் குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்து முடித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.மாத்தளை, காலி, மாத்தறை, குருநாகல் மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களிலுள்ள தொகுதிகளுக்கு இதுவரை வேட்புமனுக்கள் சமர்ப்பிக்கப்படவில்லை என ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது. பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது ஒக்டோபர் 4ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி நண்பகல் 12.00 மணிவரை தொடரும்.இதேவேளை, பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால அவகாசம் ஒக்டோபர் 10ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.