'மனசிலாயோ' பாடலுக்கு நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்

  தினத்தந்தி
மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய அசோக் செல்வன், கீர்த்தி பாண்டியன்

சென்னை,நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள 'வேட்டையன்' திரைப்படம் நாளை இந்தியா, அமீரகம் உள்பட உலகம் முழுவதும் வௌியாகிறது. 'ஜெய்பீம்' படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் தெ.செ.ஞானவேல் இயக்கத்தில் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. அமிதாப்பச்சன், மஞ்சு வாரியர், பகத் பாசில், ராணா டகுபதி மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் 'வேட்டையன்'. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 'வேட்டையன்' திரைப்படம் நாளை வெளியாக உள்ள நிலையில், இந்தியா உள்பட பல நாடுகளில் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், சமீபத்தில் வெளியான 'மனசிலாயோ' பாடல் இணையத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. இந்த பாடலுக்கு பலரும் நடனமாடி இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், 'மனசிலாயோ' பாடலுக்கு நடிகர் அசோக் செல்வன் மற்றும் நடிகைகள் கீர்த்தி பாண்டியன், வரலட்சுமி சரத்குமார், ரெஜினா ஆகியோர் இணைந்து நடனமாடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.A post shared by Star Starer (@stars_starers)

மூலக்கதை