'மெய்யழகன்' படக்குழுவை பாராட்டிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்
சென்னை,நடிகர் கார்த்தியின் 27-வது படமான 'மெய்யழகன்' படத்தை இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில் கார்த்தியுடன் முதல் முறையாக இணைந்து அரவிந்த் சாமி நடித்துள்ளார். மேலும் ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், தேவதர்ஷினி, ஜெயப்ரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.சூர்யா - ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் வரும் 'நான் போகிறேன்' மற்றும் 'யாரோ இவன் யாரோ' என துவங்கும் இரு பாடல்களை நடிகர் கமல்ஹாசன் பாடியுள்ளார். இப்படம் கடந்த 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாகி, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்தநிலையில், பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் மெய்யழகன் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "என்ன ஒரு அழகான அழகான படம், நெருங்கிய நண்பரின் நீண்ட அரவணைப்பைப் பெறுவது போல் உணர்ந்தேன்,ஷ மனதைக் கவரும் உணர்வுடன் திரையரங்கை விட்டு வெளியேறினேன் என்று கூறினார். மேலும் மனித உணர்வுகளை இவ்வளவு அழகுடன் திரையில் வெளிக்கொணர்வதில் நீங்கள் ஒரு மாஸ்டர் என இயக்குனர் பிரேம் குமாரை பாராட்டினார். சிறந்த நடிப்பை வெளிக்காட்டிய கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோரையும், சிறப்பான பணிக்காக ஒட்டுமொத்த படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். What a Beautiful Beautiful Film #Meiyazhagan is.... ❤️❤️❤️Felt like a getting a long warm hug from a close friend.... Walked out of theatre with Such a Heartwarming feeling ...Super awesome performances from @Karthi_Offl Sir @thearvindswami Sir and whole cast … pic.twitter.com/GVh0sf1Dxe