இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாராவின் திருமணக் காணொளி

  தமிழ் முரசு
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நயன்தாராவின் திருமணக் காணொளி

நயன்தாராவிற்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் நடந்த திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி விரைவில் வெளியாகும் என்று அறிவித்திருக்கிறது நெட்பிளிக்ஸ் நிறுவனம். தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவர் நயன்தாரா. அவருக்கும் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் ‘நானும் ரவுடிதான்’ படத்தின் போது காதல் ஏற்பட்டது. பரபரப்பாகப் பேசப்பட்ட அவர்களது காதல், 2022ம் ஆண்டு திருமணத்தில் முடிந்தது. சென்னை அருகே உள்ள மகாபாலிபுரத்தில் உள்ள தனியார் ரிசார்ட் ஒன்றில் அவர்களது திருமணம் பிரமாண்டமாக நடைபெற்றது. ஷாரூக்கான், ரஜினிகாந்த் உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் அதில் கலந்து கொண்டனர். அந்த திருமண நிகழ்வை அப்போதே ஓடிடி தளத்திற்கு பல கோடிகளுக்கு நயன்தாரா, விக்னேஷ் சிவன் விற்றார்கள் என்ற செய்தி வெளிவந்தது. திருமணக் காணொளியைக் கூட விற்று அதன் மூலம் வருவாய் ஈட்டுகிறார்களே என்று தமிழ்த் திரையுலக ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டார்கள்.ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக அந்தத் திருமணக் காணொளி வெளியீடு குறித்து அதன் உரிமையை வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. தற்போது விரைவில் வெளியாக உள்ளதாக அவர்களது தளத்தில் அறிவித்துள்ளனர்.‘நயன்தாரா - பியான்ட் த பேரி டேல்’ என்ற தலைப்பில் 1 மணி நேரம் 21 நிமிடங்கள் ஓடக் கூடிய ஆவணப் படமாக அது விரைவில் இடம் பெற உள்ளது.

மூலக்கதை