‘சர்தார் 2’ படப்பிடிப்பில் கார்த்திக்குடன் இணைந்த நடிகைகள்

  தமிழ் முரசு
‘சர்தார் 2’ படப்பிடிப்பில் கார்த்திக்குடன் இணைந்த நடிகைகள்

‘சர்தார் 2’ படத்தில் கார்த்திக்குடன் மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகிய நடிகைகள் நடிக்க உள்ளனர்.‘சர்தார்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ‘சர்தார் 2’ பாகம் உருவாகி வருகிறது. இந்த பாகமும் பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன், கார்த்தி கூட்டணியில் உருவாகிறது. இந்த பாகத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கின்றார். இந்தப் படத்தில் எஸ். ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.கடந்த மாதத்தில் இருந்து சென்னையில் பிரமாண்டமான அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வந்தனர். இப்போது இதன் படப்பிடிப்பில் மாளவிகா மோகனன் மற்றும் ஆஷிகா ரங்கநாதன் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பை தொடங்கியுள்ளனர். ‘தங்கலான்’ போன்று ‘சர்தார் 2’ படத்திலும் மாளவிகாவிற்கு சண்டைக் காட்சிகள் உள்ளன.

மூலக்கதை