தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து தள்ளிவைப்பு

  தமிழ் முரசு
தனுஷ்  ஐஸ்வர்யா விவாகரத்து தள்ளிவைப்பு

நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பரஸ்பரம் விவாகரத்து கோரிய வழக்கின் விசாரணையை சென்னை குடும்ப நல நீதிமன்றம் வரும் 19ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் கருத்து வேறுபாடு காரணமாக சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இருவரும் பரஸ்பர விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கு தற்போது முதன்மை குடும்ப நல நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. விசாரணையும் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ள நிலையில் இவர்கள் இருவரும் 7ஆம் தேதி நேரில் நீதிமன்றத்திற்கு வர வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அப்படி முன்னிலையாகி விவாகரத்தில் தாங்கள் உறுதியாக இருப்பதாக வாக்குமூலம் அளித்தால் நீதிமன்றம் முறைப்படி விவாகரத்து வழங்கி விடும்.ஆனால் 7ஆம் தேதி இருவருமே நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதையடுத்து விசாரணையை அக்டோபர் 19ம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது. விவாகரத்து வழக்கு ஒரு பக்கம் நடந்தாலும் இருவரையும் மீண்டும் சேர்த்து வைக்க உறவினர்களும் நண்பர்களும் தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார்கள். அந்த முயற்சியில் ஏதேனும் முன்னேற்றம் ஏற்பட்டதால் இருவரும் ஆஜராகவில்லையா என்று தெரியவில்லை. இருந்தாலும் வருகிற 19ம் தேதி உண்மை நிலவரம் தெரியவரும் என்கின்றனர் அவர்களின் நலன் விரும்பிகள்.

மூலக்கதை