இந்தியா-வங்காளதேச எல்லை அருகே ரூ.45 லட்சம் மதிப்பிலான தங்க கட்டிகள் பறிமுதல்
கவுகாத்தி,இந்தியா-வங்காளதேச எல்லை வழியாக போதைப்பொருள், தங்கம், வெடிப்பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதை தடுக்க எல்லை பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், அசாம் மாநிலம் கூச்பிகார் மாவட்டத்தில், ரகசிய தகவலின் அடிப்படையில் எல்லைப் பகுதி அருகே எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது, மொத்தம் 583.410 கிராம் எடை கொண்ட 5 தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த தங்க கட்டிகளின் மதிப்பு சுமார் ரூ.45.03 லட்சம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க கட்டிகள் சட்டவிரோதமாக இந்திய எல்லைக்குள் கடத்தப்பட்டிருக்கலாம் எனவும், இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.