நிதிஷ் ரெட்டி - ரிங்கு சிங் அதிரடி அரைசதம்... இந்தியா 221 ரன்கள் குவிப்பு

  தினத்தந்தி
நிதிஷ் ரெட்டி  ரிங்கு சிங் அதிரடி அரைசதம்... இந்தியா 221 ரன்கள் குவிப்பு

புதுடெல்லி,வங்காளதேச கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.இதில் முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இன்று டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்திற்கான டாசில் வென்ற வங்காளதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது.இதையடுத்து இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களம் இறங்கினர். இதில் சாம்சன் 10 ரன்னிலும், அபிஷேக் சர்மா 15 ரன்னிலும், அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னிலும் அவுட் ஆகினர். தொடர்ந்து இளம் வீரர்களான ரிங்கு சிங் மற்றும் நிதிஷ் ரெட்டி ஆகியோர் களம் இறங்கினர்.இருவரும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது. அதிரடியாக ஆடிய இருவரும் அரைசதம் அடித்து அசத்தினர். இதில் நிதிஷ் ரெட்டி 74 ரன்னிலும், ரிங்கு சிங் 53 ரன்னிலும் அவுட் ஆகினர். இதையடுத்து களம் இறங்கிய பாண்ட்யா 32 ரன்னிலும், பராக் 15 ரன்னிலும், வருண் சக்கரவர்த்தி ரன் எடுக்காமலும் அவுட் ஆகினர். தொடர்ந்து வாஷிங்டன் சுந்தர் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஜோடி சேர்ந்தனர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் அதிகபட்சமாக நிதிஷ் ரெட்டி 74 ரன்னும், ரிங்கு சிங் 53 ரன்னும் எடுத்தனர். வங்காளதேசம் தரப்பில் ரிஷாத் ஹொசைன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 222 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் ஆட உள்ளது.

மூலக்கதை