தொழிலதிபர் ரத்தன் டாடா காலமானார்
மும்பை: பிரபல இந்தியத் தொரிலதிபர் ரத்தன் டாடா காலமானார்.அவருக்கு வயது 86. அவர் கெளரவத் தலைவராகப் பொறுப்பு வகித்த டாடா குழுமம், புதன்கிழமையன்று (அக்டோபர் 9) அறிக்கை ஒன்றில் இத்தகவலை வெளியிட்டது.மருத்துவமனையில் உள்ளூர் நேரப்படி புதன்கிழமை இரவு 11 மணியளவில் அவர் காலமானார். மும்பை நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அவர் தீவிர சிகிச்சை பெற்று வந்ததாக தகவல் அறிந்த இருவர் முன்னதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்திருந்தனர்.இந்தியாவின் ஆகப் பெரிய குழுமங்களில் ஒன்றான டாடாவின் கெளரவத் தலைவராகப் பொறுப்பு வகித்த அவரின் உடல்நலம் குறித்து சில செய்திகள் வெளியாயின. அதனைத் தொடர்ந்து தனது உடல்நிலை சீராக இருப்பதாகவும் வயது காரணமாக அடிக்கடி மேற்கொள்ளும் மருத்துவப் பரிசோதனைகளைத்தான் தாம் மேற்கொள்வதாகவும் அவர் கடந்த திங்கட்கிழமையன்று (அக்டோபர் 7) சமூக ஊடகம்வழி குறிப்பிட்டிருந்தார். திரு டாடா, டாடா குழுமத்தை உலகளவில் பிரபலப்படுத்தியவர் என்ற பெருமைக்குரியவர். அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலாக அக்குழுமத்தின் தலைவராகப் பொறுப்பு வகித்தார்.