நவராத்திரி விழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

  தினத்தந்தி
நவராத்திரி விழாவுக்கு சென்ற மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம்

சூரத், குஜராத் மாநிலம், சூரத் மாவட்டத்தில் உள்ளது மோடா போர்சரா கிராமம். இங்கு நவராத்திரி விழா கொண்டாட்டம் நடந்து வருகிறது. விழாவை பார்க்க 17 வயது மாணவி, தனது தோழியுடன் சென்றார். விழா நடந்த இடத்தில் ஒதுக்குப்புறமான பகுதிக்கு அந்த சிறுமி சென்றபோது 3 பேர், அந்த மாணவியை தூக்கிச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதுகுறித்து அவளது தோழி தப்பி வந்து மற்றவர்களிடம் தெரிவித்து உள்ளார்.இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியதில் குற்றவாளிகள் 2 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். அவர்களை பிடித்தால், 3-வது நபரையும் பிடித்துவிடுவோம் என்றனர். இந்த சம்பவத்திற்கு முந்தைய நாள் வடோதரா பகுதியில் ஒரு சிறுமி, பயிற்சி வகுப்புக்கு சென்றுவிட்டு திரும்பியபோது இதேபோல 3 பேர் கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் ஒரே குற்றவாளிகளா என்று தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை