பெற்றோர் மடியில் உயிரை விட்ட 11 வயது சிறுமி : நடுகடலில் அகதிக்கு ஏற்பட்ட பரிதாப நிலை
சிரியாவில் போர் நடைபெற்று வருவதால் அப்பகுதியை சேர்ந்த இயாஸ் என்பவர் தனது மனைவி மற்றும் 11 வயது மகள் ரக்ஹத் ஹசொவுன் ஆகியோருடன் எகிப்தில் தஞ்சம் அடைந்தார்.
இந்நிலையில் ரக்ஹத் ஹசொவுன் நீரிழிவு நோயினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை ஜேர்மனிக்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ள அவரது தந்தை முடிவு செய்தார்.
இதையடுத்து எகிப்தில் இருந்து கள்ள படகு மூலமாக இத்தாலிக்கு பயணம் செல்ல ஆயத்தமாகினர்.
இந்நிலையில் படகில் ஏறுவதற்கு முன்பாக அவர்களை வைத்திருந்த உடமைகளை கடத்தல்காரர்கள் நீரில் விச முயன்றனர். தங்களது மகளின் நோயிக்கான மருந்துகள் அதில் இருந்ததால் அதை அனுமதிக்குமாறு அவர்கள் கெஞ்சி கேட்டனர்.
எனினும் அவர்களி அதை கடலில் வீசினர். இந்நிலையில் 5 நாட்கள் கழித்து ரக்ஹத் கடமையாக பாதிக்கப்பட்டார்.
மருந்துகள் இல்லாததால் பெற்றொர்களின் மடியிலே அவர் இறந்து போனார் என்று கூறப்படுகிறது.
இது குறித்து அவரது பெற்றோர்கள் கூறியதாவது, மருந்துகளை கடலில் போட வேண்டாம் என்று நாங்கள் எவ்வளவே கூறியும் அவர்கள் கடலில் வீசிவிட்டனர்.
எனது மகள் இறந்துபோன கவலை வாழ்நாள் முழுவதும் எங்களை தொடரும் என்று தெரிவித்தனர்.