வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் நிகழ்வு

  TAMIL CNN
வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் நிகழ்வு

சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் வெள்ளை பிரம்பு தின நிகழ்வும் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வும் நாளை வியாழக்கிழமை (15.10.2015) கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் விழிப்புலனற்றோர் சங்க தலைவர் ச.ரூபராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந் நிகழ்வில் வட்டு இந்து வாலிபர் சங்கத்தின் ஊடாக லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியத்தினால் வெள்ளைப்பிரம்பு தின நிகழ்வில் கலந்து கொள்பவர்களுக்கு 100 வெள்ளைப்பிரம்பு 200 குடை என்பனவற்றோடு நிகழ்வில் கலந்து கொள்கின்றவர்களுக்கு மதியபோசன விருந்தும் வழங்கப்படவுள்ளது.

நிகழ்விற்கு அனுசரனை லண்டன் ஓம் சரவணபகவா சேவா அறக்கட்டளை நிதியம் ஒரு லட்சத்து எண்பதாயிரம் (180,000) நிதியினை அன்பளிப்பாக வழங்கியுள்ளது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், வட்டு இந்து வாலிபர் சங்கம் சார்பாக சங்க தலைவர் கு.பகீரதன், அராலி சரஸ்வதி மகா வித்தியாசாலை அதிபர் ந.சபாரட்ணசிங்கி சமூக சேவையாளர்களான சி.சபாநாதன் குகதாசன் (வட்டு இந்து வாலிபர் சங்க கொளும்புக்கிளை) ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மன்னார் முல்லைத்தீவு வவுனியா மாவட்டத்தினை சேர்ந்த விழிப்புலனற்றோர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

மூலக்கதை