டென்மார்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த டைட்டானிக் நெக்லஸ் திருட்டு

  NEWSONEWS
டென்மார்க் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்த டைட்டானிக் நெக்லஸ் திருட்டு

குழந்தைகள், பெண்கள், மாலுமிகள், ஊழியர்கள் உள்பட 2,224 பேர் இருந்தனர். அட்லாண்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதியில் உள்ள பனிப்பாறையில் மோதி ஏப்ரல் 15ம் திகதி கப்பல் மூழ்கியது. 1,514 பேர் பரிதாபமாக பலியாயினர். 710 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

டைட்டானிக் கப்பலின் எஞ்சிய பாகங்களில் இருந்து கண்டெடுக்கப்பட்ட பொருட்களின் கண்காட்சி டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்தது. கப்பலின் பாகங்கள், பயணிகள் வைத்திருந்த பொருட்கள் உள்பட பல்வேறு அரிய பொருட்கள் இதில் காட்சிக்கு வைக்கப்பட்டன.

கப்பலின் முதல் வகுப்பில் பயணித்த அமெரிக்க பெண் எலினார் வைடனருக்கு சொந்தமானதாக கருதப்படும் தங்க நெக்லசும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. ரூ.12 லட்சம் மதிப்புள்ள இந்த நெக்லசை மர்ம ஆசாமிகள் யாரோ திருடி சென்று விட்டனர்.

இதுபற்றி கண்காட்சி உரிமையாளர் லூயிஸ் பெரைரோ கூறும்போது,"ஷோகேஸ் உடைக்கப்படவில்லை. அலாரமும் அடிக்கவில்லை. திகைப்பூட்டும்படி இந்த திருட்டு நடந்துள்ளது. கண்காட்சியில் இதைவிட விலை அதிகமான நகைகள் இருக்கின்றன. நெக்லசை மட்டும் திருடியது ஏன் என்பது தெரியவில்லை" என்றார்.

நெக்லஸ் திருடியவர்களை பொலிசார் தேடி வருகின்றனர். இதுபற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.65 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை