கொசோவோ பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கோரினாரா? வெளியான பரபரப்பு தகவல்கள்

  NEWSONEWS
கொசோவோ பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கோரினாரா? வெளியான பரபரப்பு தகவல்கள்

ஐரோப்பிய நாடுகளில் உள்ள ஏழை நாடுகளில் கொசோவோ நாடும் ஒன்று. இந்த நாட்டிற்கு Isa Mustafa என்பவர் பிரதமராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில், பிரதமரின் உடன் பிறந்த சகோதரரான Ragip Mustafa என்பவர் ஜேர்மனிக்குள் சட்டவிரோதமாக நுழைந்து அங்குள்ள Rheinland-Pfalz என்ற மாகாணத்தில் புகலிடம் கோரி விண்ணப்பம் செய்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

Insajderi.com என்ற செய்தி இணையத்தளம் நேற்று வெளியிட்டுள்ள செய்தியில், ‘கடந்தாண்டு யூன் 24ம் திகதி கொசோவோ நாட்டு பிரதமரின் சகோதரர் ஜேர்மனியில் புகலிடம் கேட்டு விண்ணப்பம் செய்தார்.

இந்த தகவலை பிரதமரே தனது பேஸ்புக் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுமட்டுமில்லாமல், மற்ற அகதிகளை போல் பிரதமரின் சகோதரரும் சட்டவிரோதமாகவே ஜேர்மனிக்குள் நுழைந்ததாகவும் செய்தி வெளியிட்டுள்ளது.

வெளியாகியுள்ள இந்த தகவலையும் கொசோவோ நாட்டு பிரதமர் உறுதி செய்துள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு தகவலையும் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘எனது சகோதரர் ஒரு மோசமான வியாதியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். இந்த வியாதியை கொசோவோ நாட்டில் குணப்படுத்த முடியாது என்பதால் தான் அவர் ஜேர்மனியில் சிகிச்சை பெற்றுக் கொள்ள புகலிடம் கோரியதாக’ உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரதமரின் சகோதரர் ஜேர்மனி நாட்டிற்குள் வரவதற்கு முன்னதாக பிரான்ஸ் நாட்டில் புகலிடம் கோரியதாகவும், அங்கு புகலிடம் மறுக்கப்பட்டதால் ஜேர்மனிக்கு சென்றதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

எனினும், கொசோவோ நாட்டு பிரதமரின் சகோதரருக்கு ஜேர்மனி அரசு புகலிடம் வழங்கியதா அல்லது நிராகரித்ததா என்ற தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை