வீடு புகுந்து கொள்ளையிட்ட மர்ம நபர்கள்: பொருட்களை மீட்க உரிமையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை

  NEWSONEWS
வீடு புகுந்து கொள்ளையிட்ட மர்ம நபர்கள்: பொருட்களை மீட்க உரிமையாளர் எடுத்த அதிரடி நடவடிக்கை

கியூபெக் மாகாணத்தில் உள்ள Varennes நகரில் ஜோனத்தன் ஹென்னிசி என்ற நபர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

சில தினங்களுக்கு முன்னர் வீட்டை பூட்டைய அவர்கள் வெளியூர் சென்றுவிட்டு திரும்பியபோது வீட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வீட்டில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த LCD தொலைக்காட்சி, மதுபான பாட்டில்கள், மடிக்கணிணி உள்ளிட்ட பல பொருட்களை மர்ம நபர்கள் கொள்ளையிட்டு சென்றுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கொள்ளைப்போன பொருட்களை திரும்ப பெற ஜோனத்தன் ஒரு அதிரடி வழியை கையாண்டுள்ளார்.

ஒரு மிரட்டல் வீடியோ ஒன்றை பதிவு செய்த அவர் அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஏய்.…கோமாளிகளே, என்னுடைய வீட்டில் அத்துமீறி பொருட்களை திருடிய நபர்கள் யார் என்று எனக்கு தெரியும்.

உங்களுக்கு நான் ஒரு நல்ல செய்தி வைத்திருக்கிறேன். அதாவது, உங்களுடைய முகங்கள் எங்கள் வீட்டில் உள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.

உங்களை எளிதில் கண்டுபிடித்து பொலிசாரிடம் ஒப்படைக்க என்னால் முடியும். ஆனால், நீங்களே முன் வந்து என்னுடைய பொருட்களை திருப்பி கொடுத்து விட்டால், நான் பொலிசாரிடம் போக மாட்டேன்.

உங்களுக்கு திங்கள் கிழமை(22.03.2016) மாலை வரை அவகாசம் அளிக்கிறேன்’ எனக்கூறி அந்த வீடியோவில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இணையத்தளத்தில் வெளியான இந்த வீடியோ குறித்து பொலிஸ் அதிகாரி ஒருவரிடம் கருத்து கேட்கப்பட்டது.

அப்போது அந்த அதிகாரி பேசியபோது, ‘நிச்சயமாக, ஜோனத்தன் செய்துள்ள இந்த செயல் பாரட்டுதலுக்கு உரியது அல்ல. ஏனெனில், கொள்ளையர்கள் ஆபத்தானவர்கள்.

உங்களிடம் நேரடியாக பொருட்களை கொடுக்க வரும்போது எது வேண்டுமானாலும் நிகழ வாய்ப்புள்ளது. இந்த முயற்சியை ஜோனத்தன் கைவிட வேண்டும்.

மேலும், அந்த வீடியோவை பொலிசாரிடம் நேரடியாக கொடுத்து புகார் பதிவு செய்தால், கொள்ளைப்போன பொருட்களை மீட்க நடவடிக்கை எடுப்போம்’ எனக் கூறியுள்ளார்.

எனினும், பொலிசாரின் அறிவுரையை ஜோனத்தான் ஏற்றாரா இல்லையா என்பது தொடர்பான தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை