‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்

  NEWSONEWS
‘அகதிகளுக்கு ஜேர்மன் மொழி தெரியாவிட்டால், குடியிருப்பு அனுமதி கிடையாது’: வருகிறது புதிய சட்டம்

ஜேர்மன் சான்சலரான ஏஞ்சிலா மெர்க்கலின் அகதிகளுக்கான தாராள கொள்கைகள் அந்நாட்டு பொதுமக்களிடையே பலத்த எதிர்ப்பை சந்தித்து வருகிறது.

இம்மாத தொடக்கத்தில் நடைபெற்ற உள்மாகாண தேர்தலில் ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதன் மூலம், ஏஞ்சிலா மெர்க்கலிற்கு எதிர்ப்புகள் வலுத்து வருவதையே காட்டுகிறது.

இந்நிலையில், ஏஞ்சிலா மெர்க்கலின் கட்சியை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினரும் ஜேர்மனி உள்துறை அமைச்சருமான Thomas de Maiziere ஒரு அதிரடி அறிவிப்பை நேற்று வெளியிட்டுள்ளார்.

அதில், ‘ஜேர்மனியில் புகலிடம் கோரி வருபவர்கள் கட்டாயம் ஜேர்மன் மொழியை கற்றுக்கொண்டு, சமுதாயத்துடன் இணக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

தங்களுடைய உறவினர்களையும் பிற குடிமக்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட ஒத்துழைக்க வேண்டும்.

ஜேர்மன் அரசு ஏற்பாடு செய்யும், அல்லது அகதிகளுக்கு வரும் வேலைவாய்ப்புகளை அவர்கள் கட்டாயம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

இதனை அகதிகள் பின்பற்றாவிட்டால், 3 ஆண்டுகளுக்கு பிறகு அவர்களுக்கு நிரந்தர குடியிருப்பு அனுமதியை ரத்து செய்யப்படும். இதற்காக விரைவில் ஒரு புதிய சட்டத்தை இயற்ற உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜேர்மனியின் துணை சான்சலரான Sigmar Gabriel இந்த புதிய சட்டத்தை வரவேற்றுள்ளார்.

ஜேர்மனியில் கடந்தாண்டு மட்டும் ஒரு மில்லியன் அகதிகளும் இந்தாண்டு தொடக்கம் முதல் ஒரு லட்சம் அகதிகளும் ஜேர்மனிக்குள் வந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளன.

மூலக்கதை