அகதி என நினைத்து குடிமகனை சிறையில் அடைத்த பொலிசார்: இறுதியில் நடந்தது என்ன?
கனடாவில் உள்ள ரொறொன்ரோ நகரில் கேப்ரியல் சான் என்ற 32 வயதான நபர் தனது பெற்றோருடன் வசித்து வருகிறார்.
கேப்ரியலின் தந்தை மற்றும் அவரது மூதாதையர்கள் அனைவரும் கனடா நாட்டை பூர்வீகமாக கொண்டவர்கள்.
கேப்ரிலின் தந்தை ஒருமுறை பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்று இருந்தபோது, அவருக்கு அதே நாட்டில் கேப்ரியல் பிறந்துள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்த கேப்ரியல் தலைநகரான மனிலாவில் தனது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு 16 வயதில், அதாவது 2000-ம் ஆண்டு முதன் முதலாக கனடா நாட்டிற்கு வந்துள்ளார்.
இந்த வருடம் முதல் கனடா நாட்டிலிருந்து பிலிப்பைன்ஸ் நாட்டிற்கும், அமெரிக்காவிற்கும் அடிக்கடி பயணம் செய்து வந்துள்ளார். கேப்ரிலின் மூதாதையர்கள் மூலம் அவருக்கு கனடா மற்றும் அமெரிக்க என இரட்டை குடியுரிமை உள்ளது.
இந்நிலையில், வெளிநாடு செல்வதற்காக கடந்த செப்டம்பர் 6-ம் திகதி Port Credit என்ற பகுதிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த அதிகாரிகள் கேபரிலிடம் குறிப்பிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர்.
ஆனால், ‘நான் ஒரு கனடிய பிரஜை தான்’ என நிரூபிக்க அவரிடம் ஆவணம் எதுவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பொலிசார் அவரை எல்லைப் பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
தான் ஒரு கனடிய பிரஜை என்பதை மேற்கொண்டும் நிரூபிக்க ஆவணங்கள் இல்லை என்பதால், அவரை அகதி என நினைத்து அகதிகளுக்கான சிறையில் அடைத்துள்ளனர்.
கேப்ரில் கனடா தந்தைக்கு பிறந்திருந்தாலும் கூட, அவருக்கு கனடா குடியுரிமை எளிதில் கிடைக்கும்.ஆனால் அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பிறந்ததால் கனடா குடியுரிமை பெறுவதற்கு முறையாக விண்ணப்பம் செய்ய வேண்டும்.
இதனை இத்தனை ஆண்டுகளாக கேப்ரில் பதிவு செய்யாமல் இருந்ததால் தான் ஒரு கனடா பிரஜையாக இருந்தாலும், அதனை அவரால் நிரூபிக்க முடியவில்லை.
அகதிகளின் தடுப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த கேப்ரில் தனது வழக்கறிஞர் மூலம் ‘நான் கனடா தந்தைக்கு தான் பிறந்தேன் என்பதை நிரூபிக்கும் மரபணு சோதனையை செய்த பின்னரே, அவர் கனடா பிரஜை என அதிகாரிகள் ஏற்றுக்கொண்டு 38 நாட்களுக்கு பிறகு கேப்ரிலை விடுதலை செய்துள்ளனர்.
எனினும், நான் கனடா பிரஜை என பலமுறை வாதம் செய்தும் தன்னை விடுதலை செய்யாத எல்லைப்பாதுகாப்பு ஏஜென்சி அதிகாரிக மீது வழக்கு தொடுக்க உள்ளதாக கேப்ரியல் தெரிவித்துள்ளார்.