டென்மார்க்கில் இரட்டை தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை: பொலிசார் அதிரடி (வீடியோ இணைப்பு)

  NEWSONEWS
டென்மார்க்கில் இரட்டை தாக்குதல் நடத்திய நபர் சுட்டுக் கொலை: பொலிசார் அதிரடி (வீடியோ இணைப்பு)

கோபன்ஹேகனில் அமைந்துள்ள கலாசார மையத்தில், இஸ்லாம் கருத்துச் சுதந்திரம் குறித்து சனிக்கிழமை மாலை கருத்தரங்கு ஒன்று நடைபெற்றுள்ளது.

அதில், 2007ம் ஆண்டு முகமது நபி குறித்த கேலிச்சித்திரத்தை வரைந்த டென்மார்க் ஓவியர் லார்ஸ் வில்க்ஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அப்போது அங்கே இருந்த நபர் ஒருவர் திடீரென தன்னிடமிருந்த துப்பாக்கியால் அரங்கில் இருந்தவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினார்.

இந்த திடீர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டதோடு 6 பொலிசார் காயமைடந்தனர்.

இந்நிலையில், இதேபோல தலைநகரின் மிகப்பெரிய யூத வழிபாட்டுத்தலத்துக்கு அருகே நள்ளிரவு 1 மணிக்கு, ஒரு நபர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டுள்ளார்.

இந்தத் தாக்குதலில் உயிரிழந்த நபர் யூத சமயத்தைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்ததோடு, இரு தாக்குதல்களையும் ஒரே நபர் நடத்தினாரா என்று தெரியவில்லை என தெரிவித்தனர்.

இந்த தாக்குதல் சம்பவங்களைத் தொடர்ந்து, தலைநகரில் காவல் பலப்படுத்தப்பட்ட நிலையில், கண்காணிப்பு வீடியோவில் பதிவான ஒரு நபரை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.

அந்த நபர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில், தலைநகரின் நோயரெப்ரோ பகுதி ரயில் நிலையத்துக்கு சென்றதோடு அங்கிருந்த பொலிஸாரை நோக்கித் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதையடுத்து பொலிசார் அந்த நபரை திருப்பிச் சுட்டதில் அவர் உயிரிழந்தார்.

இந்நிலையில், அந்த நபர் தனியாகச் செயல்பட்டாரா அல்லது அவருடன் வேறு கூட்டாளிகள் உள்ளார்களா என்பது குறித்து காவல் துறையினர் எந்தத் தகவலும் தெரிவிக்கவில்லை.

மேலும், சனிக்கிழமை மாலையில் நடைபெற்ற இரு தாக்குதல்களையும் நடத்தியவர் அவர்தான் என உறுதி செய்துள்ளனர்.

மூலக்கதை