புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி!

  PARIS TAMIL
புதிய சாதனை படைத்த விராட் கோஹ்லி!

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை பெங்களூர் அணி தலைவர் விராட் கோஹ்லி படைத்துள்ளார்.
 
ஐ.பி.எல் 2019 சீசன் தொடங்குவதற்கு முன்பு 5 ஆயிரம் ரன்னை எடுக்கப்போகும் முதல் வீரர் யார் என்பதில் ரெய்னா, கோஹ்லி இடையே போட்டி இருந்தது.
 
இருவருக்கும் முறையே 15 மற்றும் 52 ரன் தேவைப்பட்டது. சென்னையில் நடந்த தொடக்க ஆட்டத்தின் போது கோஹ்லிக்கு முதலில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் 6 ரன்னில் ஆட்டம் இழந்து வாய்ப்பை தவறவிட்டார்.
 
2-வது பேட்டிங்கின்போது ரெய்னா 15 ரன்னை எடுத்து ஐ.பி.எல்-லில் 5 ஆயிரம் ரன்னை தொட்ட முதல் வீரர் என்ற சாதனையை புரிந்தார்.
 
இந்நிலையில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை எடுத்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை கோஹ்லி படைத்துள்ளார்.
 
மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் கோஹ்லி 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். இதன்மூலம் 157 இன்னிங்சில் விளையாடி 5 ஆயிரம் ரன்களை அவர் எடுத்துள்ளார்.
 
 
 

மூலக்கதை