வோர்னர் – பரிஸ்டோவ் ஜோடி புதிய சாதனை

  PARIS TAMIL
வோர்னர் – பரிஸ்டோவ் ஜோடி புதிய சாதனை

பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி தொடக்க வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
 
ஐ.பி.எல். தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் பெங்களூர் றோயல் சலஞ்சர்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
 
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
 
சற்று முன்னர் வரை 16 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 185 ஓட்டங்களை பெற்று ஹைதராபாத் அணி அதிரடியை வெளிக்காட்டி வருகின்றது.
 
அவ்வணி சார்பாக பரிஸ்டோவ் 114 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழக்க, டேவிட் வோர்னர் 69 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளார்.
 
பரிஸ்டோவ் 7 சிக்ஸ் 12 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக சதமடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
மேலும் ஐ.பி.எல். போட்டிகளில் தொடக்க வீர்களாக களமிறங்கி 185 ஓட்டங்களை பெற்று அதிக ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொண்ட புதிய சாதனையையும் பதிவு செய்துள்ளனர்.

மூலக்கதை