முதலிடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா அணி!

  PARIS TAMIL
முதலிடத்திற்கு முன்னேறியது கொல்கத்தா அணி!

 

 
ஐ.பி.எல். ரி-20 தொடரின் 21ஆவது லீக் போட்டியில், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது.
 
ஜெய்ப்பூரில் நடைபெற்ற எதிர்பார்ப்பு மிக்க இப்போட்டியில், ராஜஸ்தான் றோயல்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.
 
இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
 
இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 139 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
 
இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக, ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழக்காது 73 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். பந்து வீச்சில் அதிகபட்சமாக ஹரி குர்னே 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இதனையடுத்து 140 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, 13.5 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது. இதனால் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
 
இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டங்களாக, கிறிஸ் லின் 50 ஓட்டங்களையும், சுனில் நரைன் 47 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் அதிகபட்சமாக ஸ்ரேயஸ் ஐயர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
 
இப்போட்டியின் ஆட்டநாயகனாக நான்கு ஓவர்கள் வீசி 25 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்திய கொல்கத்தா பந்து வீச்சாளர் ஹரி குர்னே தெரிவுசெய்யப்பட்டார்.

 

மூலக்கதை