துரித உணவுகளுக்கு இரண்டுவருட தடையா? - காரணம் என்ன??!!

  PARIS TAMIL
துரித உணவுகளுக்கு இரண்டுவருட தடையா?  காரணம் என்ன??!!

பிரான்சில் விற்பனை செய்யப்படும் துரித உணவு நிறுவனங்கள் மீது அரசு போர் தொடுக்க முடிவு செய்துள்ளது. குறைந்தது இரண்டு வருடங்களுக்கு விற்பனை தடை விதிக்க அதிக சந்தர்பங்கள் உண்டு. 
 
சூழலியல் அமைச்சகம், மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சகத்தின் தகவல்களின் படி, பிரான்சில் விற்பனையாகும் துரித உணவுகளில் 50% வீதமானவை வீணடிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இதை தடுக்க அந்த அந்த நிறுவனங்கள் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. நிறுவனங்களுக்குள் எவ்வித இணக்கமும் இல்லை என வெகுவாக குற்றம் சாட்டியுள்ளது. 
 
இவற்றில் Domino's Pizza, Exki, Subway மற்றும் Five Guys  போன்ற மிக புகழ்பெற்ற நிறுவனங்கள் உள்ளடங்குகின்றன. கடந்தவருடத்தில் இருந்து இதுவரை ஐம்பது தடவைகளுக்கு மேல் இவர்கள் மீது <<சோதனை நடவடிக்கை>> அரசு தரப்பில் இருந்து பாய்ந்துள்ளது. உணவு வீணடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கான எந்த ஒழுக்காற்ற திட்டங்ககும் இவர்களிடத்தில் இல்லை எனவும், €75,000 யூரோக்கள் வரையான தண்டப்பணம் அறவிட வாய்ப்புகள் உள்ளதாகவும், தவிர அடுத்த இரண்டுவருடங்களுக்கு துரித உணவு நிறுவனங்களுக்கு விற்பனைத் தடை விதிக்க திட்டமிருப்பதாகவும் அறிய முடிகிறது.

மூலக்கதை