ஏலத்தில் €500,000 களுக்கு விற்பனை செய்யப்பட்ட சிம்மாசனம்!!
நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஏல விற்பனை ஒன்றில் சிம்மாசனம் ஒன்று எதிர்பாரா விதமாக மிக அதிகூடிய விலைக்கு விற்பனையாகியுள்ளது.
நேற்று ஏப்ரல் 7 ஆம் திகதி, Fontainebleau (Seine-et-Marne) இல் இடம்பெற்ற இந்த ஏல விற்பனையில், பேரரசு காலத்தைச் சேர்ந்த இந்த சிம்மாசனம் €500,000 களுக்கு விற்பனையாகியுள்ளது. முன்னதாக இதற்கு எதிர்பார்க்கப்பட்ட விலை €60,000 களில் இருந்து €80,000 வரையான விலை மாத்திரமே.
கடந்த ஒரு நூற்றாண்டு காலமாக இந்த சிம்மாசனம் San Francisco Museum of Fine Arts அருங்காட்சியகத்தில் இருந்துள்ளது. இந்த சிம்மாசனம் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விற்பனைக்கு முன்னதாக, செல்வந்தரான Bruno Ledoux, இந்த சிம்மானத்தின் <<உண்மைத் தன்மை>> குறித்து தலைமையகத்தில் கேள்வி எழுப்பினார். இது சிம்மாசனத்தின் நகலாக இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் என அவர் குற்றம் சாட்டியிருந்தார்.