பிரான்சில் 700,000 அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள்! - அதிர்ச்சி தகவல்!!
சாரதி அனுமதி பத்திரம் இல்லாமல் வாகனங்கள் ஓட்டும் சாரதிகளின் எண்ணிக்கை தற்போது 700,00 ஐ தொட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சாரதி அனுமதி பத்திரம் எடுப்பதற்கான கட்டணம் மிக மிக அதிகமாக இருப்பதே இதற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு நகரம் என்று இல்லாமல் நாடு முழுவதும் இந்த சாரதிகளின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. Seine-et-Marne இல் தினமும் ஓட்டுனர் உரிமம் இன்றி பயணிக்கும் சாரதிகள் கைது செய்யப்படுகின்றார்கள். கடந்த பத்து வருடங்களில் இது இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
<<நான் வேலை பார்த்து பணம் சேர்த்து சாரதி அனுமதி அத்திரம் எடுப்பது மிக சிரமமாக காரியமாக உள்ளது>> என சாரதிகள் குற்றம் சாடியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் தரப்பில், <<அவர்களிடம் வாகனங்கள் உள்ளது. ஆனால் சாரதி அனுமதி பத்திரம் பெற பணம் இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது>> என தெரிவித்துள்ளனர். இதுவரை கணக்கிட்டதில் நாட்டில் மொத்தமாக 680,000 சாரதிகள், அனுமதி பத்திரம் இன்று வாகனங்கள் செலுத்துகின்றனர்.
அதேவேளை, சாரதி அனுமதி பத்திரம் இன்றி கைது செய்யப்படும் நபர்களுக்கு €15,000 கள் வரை தண்டப்பணம் அறவிடப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது. <<அனுமதி பத்திரம் இல்லாத சாரதிகள் விபத்துக்குள்ளாகுவதால் மேலும் பல பொருளாதார நெருக்கடியைச் சந்திக்கின்றனர்>> எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.