சுற்றுச்சூழல் மாசடைவுக்கு எதிராக பெரும் போராட்டம்! - பரிசுக்குள் சேவைக்கு வரும் 800 மின்சார பேரூந்துகள்!!

  PARIS TAMIL
சுற்றுச்சூழல் மாசடைவுக்கு எதிராக பெரும் போராட்டம்!  பரிசுக்குள் சேவைக்கு வரும் 800 மின்சார பேரூந்துகள்!!

தலைநகரில் சுற்றுச்சூழல் மாசடைவு அதிகரித்துச் செல்வதை அடுத்து, விரைவில் பரிசுக்குள் 800 மின்சார பேரூந்துகள் சேவைக்கு வர உள்ளது. 
 
நேற்று செவ்வாய்க்கிழமை பரிஸ் இல்-து-பிரான்சுக்கான பொது போக்குவரத்து துறை இதனை அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இடம்பெறுவதற்கு முன்னர் இந்த பேரூந்துகள் சேவைக்கு வரும் என அறிய முடிகிறது. டீசல் பேரூந்துகளால் சுற்றுச்சூழல் மிக மோசமான மாசடைவைச் சந்திக்கிறது என தெரிவிக்கப்பட்டு, €400 மில்லியன் யூரோக்கள் செலவில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 
மூன்று முன்னணி நிறுவனங்களான Heuliez Bus, Bollore மற்றும் Alstom  நிறுவனங்களுக்கு இந்த பேரூந்தை தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திடம் இருந்தும் ஒரே எண்ணிக்கையான பேரூந்துகளை RATP இவர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
முதல் கட்டமாக 2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 150 பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும், 2022 ஆம் ஆண்டில் மேலதிக பேரூந்துகள் சேவைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை