நவம்பர் 13 தாக்குதல் - Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறை!!
நவம்பர் 13 தாக்குதலில் தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் சமர்ப்பித்த குற்றத்துக்காக Casa Nostra உணவக நிர்வாகிக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பரிசில் உள்ள Casa Nostra உணவகத்தின் நிர்வாகி Yann Abdelhamid Mohamadi என்பவரே இவ்வாறு சிறையிலடைக்கப்பட்டுள்ளார். இவர், கடந்த நவம்பர் 13, 2015 ஆம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலின் போது, தாம் பாதிக்கப்பட்டதாக போலியான ஆவணங்கள் செலுத்தி, அரசு மற்றும் தனியார் நிறுவனங்களிடம் நஷ்ட்டஈடு பெற்றிருந்தார். இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இவருக்கு இரண்டுவருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பயங்கரவாத தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு வழங்கப்படும் நஷ்ட்ட ஈட்டு தொகையான <<Guarantee Fund for Victims of Terrorism and Other Criminal Offenses (FGTI)>> இல் இருந்து இவர் கணிசமான தொகையினை பெற்றுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.