வடக்கு பரிசில் இருந்து 500 அகதிகள் வெளியேற்றம்!!
இன்று வியாழக்கிழமை காலை, வடக்கு பரிசொ இருந்து 500 அகதிகள், காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.
குறித்த இந்த அகதிகள் A1 நெடுஞ்சாலையை ஒட்டி, மிக ஆபத்தான் கூடாரங்களில் வசித்தவர்கள் ஆவர். இன்று வியாழக்கிழமை ஏப்ரல் 11 ஆம் திகதி காலை, தன்னார்வ தொண்டர்களுடன் வருகை தந்த காவல்துறையினர், அகதிகளை வெளியேற்றினர். மொத்தமாக 500 பேர் வெளியேற்றப்பட்டனர். இவர்களில் நூறு பேர் குடும்பத்தினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 387 பேர், போர்த்து லா சப்பலில் உள்ள அகதி வரவேற்பு முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
போர்த்து லா சப்பலில் கடந்தவாரமும் வெளியேற்றப்பட்டு, வேறு பகுதிகளுக்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். அதேவேளை, பரிசுக்குள் அகதிகள் தங்குவதற்கான மேலதிக தங்குமிடம் அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.