சலிம் துரானி காலமானார்
இந்திய அணி முன்னாள் ஆல் ரவுண்டர் சலிம் துரானி (88 வயது), குஜராத் மாநிலம் ஜாம்நகரில் நேற்று காலமானார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் பிறந்த துரானி, இந்திய அணிக்காக 29 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இடது கை பேட்ஸ்மேன் மற்றும் சுழற்பந்துவீச்சாளரான அவர் 1202 ரன் (அதிகம் 104, சராசரி 25.04, சதம் 1, அரை சதம் 7) மற்றும் 75 விக்கெட் எடுத்துள்ளார். 1961-62ல் இங்கிலாந்து அணி இந்தியா வந்து விளையாடிய டெஸ்ட் தொடரில், இந்திய அணி கொல்கத்தா மற்றும் சென்னையில் நடந்த போட்டிகளில் அபாரமாக வென்று 2-0 என தொடரை கைப்பற்றியதில் துரானி முக்கிய பங்காற்றினார். அந்த தொடரில் அவர் 18 விக்கெட் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. துரானியின் மறைவுக்கு பிரதமர் மோடி, பிசிசிஐ, கிரிக்கெட் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.