'தேவரா' 2ம் பாகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங்..! - இயக்குனர் கொரட்டலா சிவா

  தினத்தந்தி
தேவரா 2ம் பாகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங்..!  இயக்குனர் கொரட்டலா சிவா

இயக்குனர் கொரட்டலா சிவா இயக்கத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடித்துள்ள 30-வது படம் 'தேவரா'. அனிருத் இசையமைத்துள்ள இந்த படத்தில் பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் நாயகியாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் சாயிப் அலிகான், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கடந்த செப்டம்பர் 27-ந் தேதி வெளியான இப்படம், இதுவரை ரூ.466 கோடி வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இருப்பினும் படக்குழு எதிர்பார்த்த வெற்றியை அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது..இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் தேவரா படத்தின் இயக்குனர் கொரட்டலா சிவா கூறியதாவது, " தேவரா படத்தின் இரண்டாம் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் யாரையும் நடிக்க வைக்க திட்டமில்லை. மாறாக, சில முக்கியமான கதாபாத்திரங்களை அறிமுகப்படுத்தும் எண்ணம் இருக்கிறது. தேவாராவின் உலகத்தில் ரன்பீர் கபூர் அல்லது ரன்வீர் சிங் இருந்தால் நன்றாக இருக்கும். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இரண்டாம் பாகத்தின் 20 நாள் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது. முன் தயாரிப்பு பணிகளும் வேகமாக நடைபெற்று வருகின்றன" என்றார்மற்றொரு நேர்காணலில் ஜூனியர் என் டிஆர், "திரையரங்குகளில் நாங்கள் எதிர்பார்த்தது வேறு. சினிமாவை மக்கள் பார்க்கும் விதம் மாறிவிட்டது" எனக் கூறியுள்ளார்.

மூலக்கதை