பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க புகார் குழு அமைக்க வேண்டும்
சென்னை: பெண்கள் பணிபுரியும் அனைத்து நிறுவனங்களிலும் புகார் குழு அமைக்க வேண்டும் என்று சென்னை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மாவட்டத்தில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பணிபுரியும் நிறுவனங்கள், அரசு அலுவலகங்கள், அரசு சாரா நிறுவனங்கள், வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், மென்பொருள் தொழில்நுட்ப நிறுவனம் உள்ளிட்ட நிறுவனங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம் 2013ன் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுக்க அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்களில் உள்ள புகார் குழு ஏற்படுத்தப்படவேண்டும். இக்குழு குறைந்தபட்சம் 5 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட வேண்டும். அவற்றில் அதிகபட்சமாக (3) பெண் உறுப்பினர்கள் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.