நஜிப்பின் முன்னாள் மெய்க்காப்பாளர்; தண்டனை குறைப்பு

  தமிழ் முரசு
நஜிப்பின் முன்னாள் மெய்க்காப்பாளர்; தண்டனை குறைப்பு

கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கின் முன்னாள் மெய்க்காப்பாளருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டு 40 ஆண்டுகள் சிறைத் தண்டனை, 12 பிரம்படிகளாகக் குறைக்கப்பட்டுள்ளது.அசிலா ஹட்ரியின் தண்டனைக்காலம் அக்டோபர் 10ஆம் தேதியன்று குறைக்கப்பட்டது.மங்கோலிய விளம்பர அழகி அல்தன்துயா ஷாரிபு கொலை வழக்கில் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்ட இருவரில் அசிலாவும் ஒருவர்.அல்தன்துயா ஷாரிபுவுக்கு நஜிப்புடனும் அவரது முன்னாள் ஆலோசகர்களில் ஒருவருக்கும் தொடர்பு இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கட்டாய மரண தண்டனையை மலேசியா 2023ஆம் ஆண்டில் ரத்து செய்தது.ஆனால் போதைப்பொருள் கடத்தல், பயங்கரவாதம், கொலை போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கலாம் என்று மலேசிய நீதிமன்றம் தெரிவித்தது.இந்த வழக்கில் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட மற்றொருவரான சைருல் அஸார் உமர் ஆஸ்திரேலியாவில் இருக்கிறார்.அல்தன்துயா கொலைக்கு உடந்தையாக இருந்ததாக நஜிப்பின் முன்னாள் ஆலோசகர் அப்துல் ரசாக் பகிண்ட மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.ஆனால் அவர் குற்றவாளி அல்ல என்று 2008ஆம் ஆண்டில் தீர்ப்பளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்.1எம்டிபி ஊழல் குற்றத்துக்காக நஜிப்புக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.அவர் காஜாங் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.2024ஆம் ஆண்டில் அவரது தண்டனைக்காலம் ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது.

மூலக்கதை