ஆயுத பூஜை: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

  தினத்தந்தி
ஆயுத பூஜை: சனிக்கிழமை அட்டவணைப்படி இன்று மெட்ரோ ரெயில்கள் இயக்கம்

சென்னை,ஆயுதபூஜை தொடர் விடுமுறையையொட்டி, ஏராளமானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள். இதற்காக சிறப்பு பேருந்துகள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதன் காரணமாக பேருந்து நிலையம், ரெயில் நிலையம் செல்வதற்கு ஏதுவாக மெட்ரோ ரெயில் அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி, ஆயுதபூஜை தொடர் விடுமுறையை முன்னிட்டு இன்று சனிக்கிழமை அட்டவணைப்படி மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.காலை 8 முதல் 11 வரை, மாலை 5 முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.அதிகாலை 5 மணி முதல் காலை 8 மணி வரை, காலை 11மணி முதல் மாலை 5 மணி வரை, இரவு 8:00 மணி முதல் 10:00 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். 10:00 மணி முதல் 11:00 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை